Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழகத்தில், பாஜகவை எதிர்த்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அறிவித்துள்ளார்.
கடந்த முறை காங்கிரஸுக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டது நல்ல பலனைத் தந்தது. இந்த முறை பாரதிய ஜனதா கூட்டணிக்கு எதிராக பிரச்சாரம் செய்யவிருக்கிறோம் என அவர் கூறினார். மேலும், நாடாளுமன்றத் தேர்தலில் 3வது அணி சார்பில் முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமராகும் வாய்ப்பு கிடைத்தால் நாம் தமிழர் கட்சி முழு ஆதரவு தெரிவிக்கும் என்றும் கூறினார்.

திருநெல்வேலியில் இன்று நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு கூறினார். தமிழகத்தில் பாஜகவுக்கு ஆதரவாக தேமுதிக பிரச்சாரத்தை தொடங்கியுள்ள நிலையில், ஊழலை ஒழித்துக் காட்டக் கூடிய ஒரே ஒரு தலைவர் நரேந்திர மோடி தான் என விஜயகாந்த் தனது பிரச்சாரத்தின் போது கூறிவருகிறார். இந்நிலையில் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்யப் போவதாக நாம் தமிழர் கட்சி கூறியுள்ளது.

0 Responses to பாஜகவை நேரடியாக எதிர்த்து பிரச்சாரம் : நாம் தமிழர் கட்சி முடிவு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com