குஜராத் மாநிலம் காந்தி நகரில் வாக்களித்த நரேந்திர மோடி, அம்மா-மகன் ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது என்று கூறியுள்ளதோடு, கட்சிச் சின்னத்தையும் கையில் வைத்துக்கொண்டுப் பேசியதால் சர்ச்சை எழுந்துள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான 7ம் கட்டத் தேர்தல் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று நடைபெற்று வருகிறது. குஜராத்தின் காந்தி நகரில் போட்டியிடும் நரேந்திர மோடி வாக்களித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தேர்தல் பிரச்சாரம் போல, மக்களின் கையில் மாய சக்தி உள்ளது என்றும், அம்மா- மகன் ஆட்சி இத்துடன் முடிவுக்கு வருகிறது என்றும் கூறியுள்ளதோடு, கையில் தாமரை சினத்தை வைத்துக் கொண்டு அமர்ந்து செய்தியாளர்களை சந்தித்தது என்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
பாஜகவுக்கு வாக்களியுங்கள் என்று சொல்வது போல வாக்களித்துவிட்டு தாமரை சின்னத்துடன் செய்தியாளர்களை சந்தித்தது, யாருக்கு வாக்களித்தோம் என்கிற ரகசியத்தை காக்காமல் போட்டுடைத்தது போன்ற தேர்தல் விதிமுறைகளை மோடி மீறியுள்ளதாக காங்கிரஸ், ஆம் ஆத்மிக் கட்சிகள் தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளன.

0 Responses to அம்மா - மகன் ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது!:நரேந்திர மோடி