Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சென்னையின் சிறுச்சேரியில் பாலியல் பலாத்காரத்தில் உயிரிழந்த ஐடி பெண் ஊழியர் உமா மகேஸ்வரியின் வழக்கில் 850 பக்க குற்றப்பத்திரிகையை சிபிஐ இன்றுத் தாக்கல் செய்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் சேலம் ஆத்தூரை சேர்ந்த உமாமகேஸ்வரி என்கிற ஐடி பெண் ஊழியர், சென்னையை அடுத்துள்ள சிறுச்சேரியில்  பணி முடிந்து திரும்பிய போது  3 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். சில தினங்களுக்குப் பின்னர்  இவரது உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அவர் கத்தியால் குத்துப் பட்டும், பின்னர் பாதி  உடல் எரிந்த நிலையிலும் உயிரிழந்துள்ளார் என்று கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்தக் குற்றசெயலில் ஈடுப்பட்ட இளைஞர்கள் சென்னையில் கட்டிட வேலைப்பார்க்கும் மேற்கு வங்கத்தினர் என்று கண்டுப்பிடிக்கப் பட்டு, அவர்களை கைது செய்து சிபிஐ போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று குற்றவாளிகள் மீதான 850 பக்க குற்றப்பத்திரிகையை சிபிஐ போலீசார் இன்று தாக்கல் செய்துள்ளனர் என்பதுக் குறிப்பிடத்  தக்கது.

0 Responses to பாலியல் கொடுமை :உயிரிழந்த ஐடி பெண் ஊழியர் வழக்கில் 850 பக்க குற்றப்பத்திரிகை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com