தம்மை தனிமை சிறையின் இருட்டறையில் வைத்து வதைப்பதாக தீவிரவாதி என்று சொல்லப்படும் யாசிம் பட்கல் புகார் அளித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் நேபாள எல்லையில் பதுங்கியிருந்த போது பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார் யாசிம் பட்கல். இவர் இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் நிறுவனர் என்றும் கூறப்படுகிறது. புனே, பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், டெல்லி திஹார் சிறையில் தாம் தேசிய புலனாய்வுத் துறையினரால் விசாரணையின் போது தொடர்ந்து துன்புறுத்தப்படுவதாக கூறியுள்ளார்.
மேலும், சிறை விதிமுறைகளுக்குப் புறம்பாக தம்மை தனிமை சிறையின் இருட்டறையில் கடந்த 7 மாதங்களாக வைத்து வதைப்பதாகவும் யாசிம் பட்கல் புகார் தெரிவித்துள்ளார். இவரது புகாரை அடுத்து அவருக்கு சிறை விதிமுறைகளுக்கு உட்பட்டு அனைத்து வசதிகளையும் செய்துத் தர சிறைத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது என்று தெரிய வருகிறது.

0 Responses to தனிமை சிறையின் இருட்டறையில் வைத்து வதைப்பதாக யாசிம் பட்கல் புகார்!