தேசியக் கூட்டமைப்பை கட்சியாகப் பதிவு செய்வது தொடர்பான விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. நாளைய தினம் திருகோணமலையினில் நடைபெறவுள்ள கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டத்தினில் ஆராயப்படவுள்ள விடயங்களுள் இவ்விடயமும் உள்ளடக்கப்பட்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பியின் தலைமையில் திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நாளை மாலை 4 மணிக்கு ஆரம்பமாகும் இந்தக் கூட்டத்தில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொள்வர் என அவர் குறிப்பிட்டார்.
மேற்படி கூட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணசபைகளின் தற்போதைய நிலைவரங்கள், கூட்டமைப்பின் வெளிவிவவாரக் கொள்கைளைக் கையாள்வது எப்படி?, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கட்சியாகப் பதிவு செய்வதா? இல்லையா? ஆகியவை உட்பட வடக்கு, கிழக்கின் சமகால நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

0 Responses to கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டம் திருமலையில்!