குடும்ப வறுமை நிலை காரணமாக பாடசாலைக்கு செருப்புடன் சென்ற மாணவிக்கு ஆசிரியர் தண்டிப்பதாகக் கூறி செருப்பை மாலையாக்கி அணிவித்த சம்பவமொன்று திருகோணமலை பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை சேருநுவர பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் கடந்த வெள்ளிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தகவலறிந்த சேருநுவர பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எம்.பீ.வீரரத்ன, பாதிக்கப்பட்ட மாணவிக்கு தனது சொந்த செலவில் சப்பாத்து வாங்கிக் கொடுத்துள்ளார்.
சம்பவம் பற்றித் தெரியவருவதாவது.
தந்தையை இழந்து தாயுடன் ஏழ்மை நிலையில் வாழ்ந்து வந்துள்ள மேற்படி மாணவி தன்னிடம் சப்பாத்து இல்லாத காரணத்தால் செருப்பை அணிந்து பாடசாலைக்குச் சென்றுள்ளார்.
இதனை அவதானித்த பாடசாலையின் ஒழுக்க நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாகவுள்ள ஆசிரியை, அம் மாணவியை தண்டிக்கும் முகமாக அவர் அணிந்து வந்த செருப்பை மாலையாக்கி மாணவியின் கழுத்தில் அணிவித்துள்ளார்.
இது தொடர்பில் தகவல் அறிந்த சேருநுவர பொலிஸார் பாடசாலைக்குச் சென்று அதிபரிடம் விசாரணை மேற்கொண்டதுடன் குறித்த மாணவிக்கு சப்பாத்தும் வாங்கி கொடுத்துள்ளார்.
எவ்வாறாயினும் மாணவியின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு இப்பிரச்சினையை பெரிதுபடுத்த விரும்பவில்லை என பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் தெரிவித்துள்ளார்.
அன்னைக்கு அடுத்தபடியாக இருக்கும் ஆசிரியர்களே குறித்த மாணவி போன்ற வறுமைக்கு கீழ் வாழும் சிறார்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தண்டனைகளை வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.

0 Responses to மாணவிக்கு செருப்பு மாலை! ஒழுக்க ஆசிரியை ஒருவரின் அடாவடித்தனம்!