சிங்களக் குடும்பங்கள் குடும்பக் கட்டுப்பாட்டு முறையை கைவிட்டு, அதிகளவு பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கையிலுள்ள மற்ற இனங்கள் அதிகளவு பிள்ளைகளைப் பெற்றுக் கொள்கின்ற நிலையில் சிங்களக் குடும்பங்களே குடும்பக் கட்டுப்பாட்டு முறையை கடைப்பிடிக்கின்றனர். எனவே, நடைமுறையிலுள்ள குடும்பக்கட்டுப்பாட்டு திட்டத்தை இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கம்பஹா, கிரிந்திவெல பகுதியில் 8 குழந்தைகளைக் கொண்ட சிங்களக் குடும்பம் ஒன்றுக்கு உதவுவதற்காக நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்ற அமைச்சர் மேர்வின் சில்வா, அங்கு வைத்தே ஊடகவியலாளர்களிடம் மேற்கண்ட விடயங்களைக் கூறியுள்ளார்.

0 Responses to சிங்களக் குடும்பங்கள் அதிக பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்: மேர்வின் சில்வா