தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்காக வெளிநாடுகளுக்கு இலங்கையில் இருந்து புலனாய்வுத் தரப்பினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான சர்வதேச நடவடிக்கைகளின் நிமித்தம், இலங்கையில் 18 புலனாய்வு அதிகாரிகள், 18 நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக சிங்கள நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
எனினும் இது தொடர்பில் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சு, இந்த தகவலை நிராகரித்துள்ளது.
அண்மையில் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையதாக கூறப்படும் 16 அமைப்புகள் மற்றும் தனி நபர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த தடை தொடர்பில் வெளிநாடுகளின் அதிகாரிகளுக்கு விளக்கமளிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டிருந்த போதும், அவர்கள் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to 18 வெளிநாடுகளில் புலிகளின் செயற்பாடுகளைக் கண்காணிக்க 18 புலனாய்வு அதிகாரிகள் அனுப்பியது இலங்கை!!