Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்றைய ராசி பலன் 21-05-2014 | Raasi Palan 21-05-2014

பதிந்தவர்: தம்பியன் 21 May 2014

மேஷம்
பொருளாதார நிலை உயரும் நாள். வருங்கால நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். வெளிநாட்டுத் தொடர்பு விருத்திக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.

ரிஷபம்
பம்பரம் போல் சுழன்று பணிபுரியும் நாள். ஆதரவுக்கரம் நீட்டுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். அஞ்சல் வழியில் அனுகூலமான தகவல் வந்து சேரும். தொழில் வளர்ச்சி மேலோங்கும்.

மிதுனம்
காலை நேரத்தில் கவனம் தேவைப்படும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். சிக்கலான காரியங்கள் சிரமமின்றி முடியும். முன்னோர் சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் விலகும்.

கடகம்
விழிப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டிய நாள். மனதில் இனம் புரியாத கவலைகள் தோன்றும். குடும்பத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் உருவாகி மறையும். நண்பர்களால் அலைச்சலும், கோபமும் அதிகரிக்கலாம்.

சிம்மம்
வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். வெளியூர் பயணத்தால் வெற்றி கிட்டும். கலைத்துறை சம்பந்தப்பட்டவர்களால் காரிய அனுகூலம் கிடைக்கும். பால்ய நண்பர்களின் சந்திப்பால் பரவசம் ஏற்படும்.

கன்னி
உடல் நலம் சீராகி உற்சாகப்படுத்தும் நாள். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குடும்பத்தாருடன் குதூகலப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள். மறைமுக எதிர்ப்புகள் மாறும்.

துலாம்
மக்கட் செல்வங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். நீண்ட நாளைய ஆசையொன்று நிறைவேறும். கட்டிடம் கட்டும் பணிக்கு அஸ்திவாரமிடுவீர்கள். புதல்வர்களின் ஒத்துழைப்போடு புது முயற்சியொன்றில் ஈடுபடுவீர்கள்.

விருச்சகம்
பண வரவு திருப்தி தரும் நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். வீடு வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். தொழில் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.

தனுசு
உடன் பிறப்புகள் வழியில் நல்ல தகவல் கிடைத்து உள்ளம் மகிழும் நாள். சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும். பாதியில் நின்ற பணிகளை மீதியும் தொடருவீர்கள். குடும்ப பொறுப்புகள் கூடும்.

மகரம்
இனிய செய்தி இல்லம் வந்து சேரும் நாள். எதிர்கால நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். கைநழுவிச் சென்ற வரன்கள் மீண்டும் வந்து சேரலாம்.

கும்பம்
பெருமாள் வழிபாட்டால் பெருமைகள் வந்து சேரும் நாள். விரயங்கள் கூடும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொலைபேசி வழித்தகவலால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மீனம்
வரவைக் காட்டிலும் செலவு கூடும் நாள். எந்த முக்கிய முடிவையும் யோசித்து எடுப்பது நல்லது. குடும்பத்தினர்கள் அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். கடிதம் கனிந்த தகவலைத் தரும்.

0 Responses to இன்றைய ராசி பலன் 21-05-2014 | Raasi Palan 21-05-2014

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com