X-37B எனப் படுவது அமெரிக்காவில் உருவாக்கப் பட்ட ஆளில்லா ரோபோட்டிக் விமானம் ஆகும்.
இவ்விமானம் தொடர்ச்சியாக 500 நாட்களுக்கு இவ்விமானம் பூமியின் சுற்று வட்டப் பாதையில் வலம் வந்துள்ளது. இதற்கான காரணம் இதுவரை மிக மர்மமாக உள்ளது. இவ்விமானம் பற்றி அறியப் பட்ட தகவல்கள் கீழே!
கலிபோர்னியாவில் போயிங் விமான நிலையத்தால் கட்டப் பட்ட X-37B ஆர்பிட்டல் விண்வெளி வாகனமான இது அமெரிக்க விமானப் படைக்காக பரீட்சார்த்தமாகத் தயாரிக்கப் பட்டது. என்டேவர் விண் ஓடத்தின் காற் பகுதி இருக்கும் இவ்விமானம் புவிச் சுற்றுவட்டப் பாதையில் இருந்து வளிமண்டலத்துக்குள் நுழையும் போது தீப்பிடிக்காமல் இருப்பதற்கான வெப்பத்தைத் தாங்கும் உலோகத்தால் ஆனது. தற்போது இவ்விமானம் 28 044 Km/h வேகத்தில் தரையில் இருந்து 350 Km உயரத்தில் புவியைச் சுற்றி வருகின்றது. இதனால் தரை இறங்க முடியும். ஆனால் எப்போது என்பது தான் மர்மமாக உள்ளது.
ஏப்பிரல் 22 2010 ஆம் ஆண்டு ஓர் ராக்கெட்டு மூலம் விண்ணில் முதலில் செலுத்தப் பட்டு 2010 டிசம்பர் 3 ஆம் திகதி சிறிய சேதத்துடன் புவியில் தரை இறங்கியது. இரண்டாவது தடவையாக கேப் கனவெரல் ஏவுதளத்தில் இருந்து டிசம்பர் 11 2012 இல் ஏவப்பட்ட இவ்விமானம் 500 நாட்களைக் கடந்து இன்னமும் தரை இறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது உளவு நடவடிக்கைக்காகவா அல்லது வேறு தேவைகளுக்கா விண்ணில் சுற்றி வருகின்றது என்பது இன்னமும் தெளிவாகவில்லை!
ஆளில்லா இவ்விமானம் கல்லியம் சோலார் படல்களில் இருந்து லித்தியம் அயம் பேட்டரிக்கு மின்னைப் பெற்றுத் தனது சக்தித் தேவைக்குப் பயன்படுத்துகின்றது.

0 Responses to தொடர்ச்சியாக 500 தினங்களுக்கு பூமியைச் சுற்றி வந்த X-37B விமானம்!:வெளிவராத மர்மம்?