தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை ஞானதேசிகன் திடீரென ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் ''கடந்த 3 ஆண்டுகள் தமிழக காங்கிரஸ் கட்சியில் ஒற்றுமையை ஏற்படுத்த என்னால் இயன்ற அளவு முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன். தமிழக காங்கிரஸ் கட்சியை மறுசீரமைக்க உதவும் வகையில் எனது பதவியை ராஜினாமா செய்துள்ளேன். தமிழக காங்கிரஸ் தலைவராக சேவையாற்ற எனக்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி'' என்று தெரிவித்துள்ளார்.
கடந்த இரு நாட்களுக்கு முன்னர் டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் இடம்பெற்ற மாநில அளவிலான காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் வைத்து தமிழக காங்கிரஸ் உறுப்பினர்கள் அடையாள அட்டையில் ஜி.கே.மூப்பனார், காமராஜர் போன்றோரின் படத்தை பதிவிடுமாறு காங்கிரஸ் மேலிடத்திற்கு ஞானதேசிகன் கோரிக்கை விடுத்ததாகவும் ஆனால் சோனியா காந்தி, ராகுல் காந்தியின் படங்களை தவிர்த்து வேறு எவரது படத்தையும் போடமுடியாது என தலைமை மறுத்துவிட்டதாகவும் இதனாலேயே ஞானதேசிகன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஞானதேசிகன் மீதான அழுத்தத்திற்கு ராகுல் காந்தியே காரணம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

0 Responses to தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை திடீரென ராஜினாமா செய்த ஞானதேசிகன்: காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு