தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கைத் துணை தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்று வருவதால், அங்கு பாதுகாப்புக்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
நேற்று இலங்கை ஊர்க்காவல் நீதிமன்றம் இலங்கை மீனவர்கள் 3 பேர் உட்பட, தமிழக மீனவர்களுக்கும் சேர்த்து மொத்தம் 8 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனால் ராமேஸ்வரத்தில் நேற்று மீனவர்களும் மற்றவர்களும் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் ராமேஸ்வரத்தில் இன்றும் பதற்றம் நீடித்து வருகிறது.
இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம் முன்பு பல தமிழ் அமைப்புக்கள் கூடி, போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் இலங்கைத் தூதரகம் முன்பு பதற்றம் நிலவி வருகிறது. அங்கு பாதுகாப்புக்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அமைப்புக்கள் அனுமதி இன்றி போராட்டம் நடத்தி வருவதால், போராட்டக்காரர்கள் சில நிமிடங்களில் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிய வருகிறது.
மீனவர்கள் தடை செய்யப்பட போதைப் பொருட்களை தங்களது படகில் வைத்திருந்தார்கள் என்பது மீனவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கு என்பதுக் குறிப்பிடத் தக்கது.

0 Responses to சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ளை இலங்கை துணைத் தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!