சிறையில் உள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏனைய கைதிகளை விட மிகமுக்கியமானவர்களுக்கான உபசரிப்பு இடம்பெறுவதாக வெளியான தகவல்களை கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
ஜெயலலிதாவும் ஏனைய கைதிகளை போன்றே உபசரிக்கப்படுகிறார் என்று பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவுக்கு ஏனைய கைதிகளை போன்றே பொது தொலைக்காட்சி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜெயலலிதாவை பொறுத்தவரை இவர் கடூழிய சிறைத்தண்டனைக்கு உள்ளாக்கப்படவில்லை. எனவே அவருக்கு சாரிகள் அணிவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் அவர் வைத்தியர்களின் ஆலோசனைப்படி சாதாரண உணவுகளையே உண்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிறைத்துறை அதிகாரி ஜெய்சிம்ஹா மேலும் கூறியதாவது:-
ஜெயலலிதாவுக்கு வி.ஐ.பி. சிகிச்சை எதுவும் அளிக்கப்படவில்லை. பரப்பன அக்ரஹாரா சிறையில் மற்ற சாதாரண கைதிகள் எப்படி நடத்தப்படுகின்றனரோ அதைப்போலவே தான் ஜெயலலிதாவும் நடத்தப்படுகிறார்.
சிறையில் ஜெயலலிதா ஜெயில் அதிகாரிகளிடம் மிகவும் அமைதியாகவே நடந்து கொண்டார்.
டாக்டர்களின் பரிந்துரைப்படி இரும்பு கட்டிலை தவிர வேறெந்த வசதியையும் அவர் வேண்டும் என்றும் கேட்கவில்லை.
சாதாரண கைதிகளுக்கு கூட தொலைக்காட்சி பெட்டி வசதி வழங்கப்பட்டு வரும் நிலையில் அதைக்கூட ஜெயலலிதா கேட்கவில்லை.
சிறையில் அவருக்கு டாக்டர்கள் பரிந்துரைப்படி பிரவுண் பிரெட், பால், பிஸ்கட்டுகள், பழங்கள் மற்றும் சப்பாத்திகளே வழங்கப்பட்டு வருகிறது.
அதுவும் அவர் விருப்பத்தின் பேரில் மட்டுமே. இதுதவிர படிப்பதற்கு நியூஸ் பேப்பர்களும் கொடுக்கப்படுகின்றன.
அதேவேளை, வெளிநபர்கள் யாரையும் அவர் சந்திக்கவில்லை. சந்திக்க விரும்பும் நபர்கள் குறித்து ஜெயலலிதாவுக்கு தகவல் அளித்தாலும், யாரையும் சந்திக்க அவர் இன்று வரை ஒப்புதல் அளிக்கவில்லை என்றார்.

0 Responses to சிறையில் உள்ள ஜெயலலிதாவுக்கு சிறப்பு கவனிப்பு எதுவுமில்லை! - சிறை அதிகாரி