மஹிந்த ராஜபக்ஷ திரும்பத் திருப்ப பழைய பல்லவியையே பாடுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழு மற்றும் அதற்கான அழைப்பு ஆகிய தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதில் பங்குபற்ற முடியாது என்று மிக்கத் தெளிவாகவே அறிவித்து விட்டது. இவ்வாறான நிலையில், வரவு செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதி மீண்டும் அழைப்பு விடுத்திருப்பது பாடிய பாட்டையே மீண்டும் பாடிக்கொண்டிருப்பதற்கு ஒப்பானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் மீதான சிறப்பு விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர் தொடர்பில் ஏதாவதொன்றை கூறிவிட வேண்டும் என்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இந்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த பொன். செல்வராசா, யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் மீள்குடியேற்றப்பட்டவர்கள் தொடர்பில் எதுவும் கூறப்படாதது கவலையளிக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.

0 Responses to மஹிந்த பழைய பல்லவியை திரும்பவும் பாடுகின்றார்: கூட்டமைப்பு