தற்போதைய ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு சட்ட அங்கீகாரம் ஏதும் இல்லை என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளரான ரில்வின் சில்வா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “உண்மையான மக்கள் ஆணை மறைக்கப்பட்ட, தார்மீகமற்ற தற்போதைய பாராளுமன்றத்தில் காணப்படும் மூன்றில் இரண்டு அதிகாரத்தினால் நிறைவேற்றப்பட்ட 18வது அரசியலமைப்பிலும் ஜனாதிபதிக்கு மூன்றாவது தடவையாக தேர்தலில் போட்டியிட சட்ட அங்கீகாரம் வழங்கப்படவில்லை.
முன்னாள் பிரதம நீதியரசர் உள்ளிட்ட சட்ட வல்லுனர்கள் இதனை தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளனர். 18வது அரசியலமைப்பு திருத்தத்தின் பின்னரும் ஜனாதிபதியால் மூன்றாவது தடவையாக தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. அதனை நாங்களும் உறுதியாக நம்புகின்றோம். ஆகவே அவ்வாறு ஜனாதிபதி மீண்டும் போட்டியிட்டால் அது சட்ட விரோதமான தேர்தலாகவே அமையும்” என்றுள்ளார்.

0 Responses to மஹிந்த மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது: ஜே.வி.பி