Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டில் இன்று சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை. மாறாக, காட்டாட்சியே நடைபெறுகின்றது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் தனது விருப்பத்திற்கு ஏற்றவாறு அரசியல் அமைப்பை செயற்படுத்துகின்றது. இதனால் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர் என்று லுனுகம்வெஹேர பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போது அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி தேர்தல் நடைப்பெறவுள்ளது. தற்போதைய ஜனாதிபதிக்கு மூன்றாவது தடவையாகவும் போட்டியிட முடியுமா? முடியாதா? அது அரசியலைப்பிற்கு ஏற்புடையதா? சட்டத்திற்கு உட்பட்டதா? என்பது தொடர்பிலான விவாதங்களும் சூடுபிடித்துள்ளன.

ஆனால், இன்று எமது நாட்டில் அரசியலமைப்பு வெளிப்படையாகவே மீறப்படுகின்றது. நாட்டில் சட்டம் செயற்படுவதில்லை. இன்று நாட்டில் காட்டு ஆட்சியே காணப்படுகின்றது. தமது தேவைக்கு ஏற்றவாறு அரசியலமைப்பு மற்றும் சட்டத்தை செயற்படுத்தும் காலப் பகுதியிலேயே நாம் வாழ்கின்றோம்.

நாட்டில் அரசியலமைப்பு செயற்படவில்லை என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆட்சியாளர்களின் தேவைக்கு ஏற்பவே அரசியலமைப்பு செயற்படுத்தப்படுகின்றது. அரசியலமைப்பில் காணப்படும் விடயங்களை குப்பையில் போட்டு, தமக்கு நன்மை ஏற்படும் வகையில் பயன்படுத்தப்படுகின்றது” என்றுள்ளார்.

0 Responses to நாட்டில் இன்று காட்டாட்சியே நடைபெறுகின்றது; சஜித் பிரேமதாஸ குற்றச்சாட்டு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com