Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

2ஜி அலைக்கற்றை ஏல ஒதுக்கீட்டு முறையில் 800 கோடி ரூபாய் கைமாறிய விவகாரத்தில் ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள் உள்ளிட்ட 10 பேர் மீது  வழக்குப் பதிவு செய்ய டெல்லி சிற்பி சிபிஐ நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.

2ஜி அலைக்கற்றை ஊழல் முறைகேடுத் தொடர்பாக டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணை மீண்டும் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இன்று ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள், அமிர்தம் உள்ளிட்ட 10 பேர் மற்றும் தனியார் தொலைகாட்சி நிறுவனங்கள் உட்பட 9 நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடப்படும் என்று எதிர்ப்பார்ப்பு நிலவியது. அதன் படி நீதிபதி ஷைனி மேற்கண்ட 10 பேர் மற்றும் 9 நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவுப் பிறப்பித்துள்ளார். வழக்குப்
பதிவு செய்து வருகிற நவம்பர் 11ம் திகதிக்கும் விசாரணையைத் துவக்கிவிட வேண்டும் என்றும், நீதிபதி ஷைனி உத்தரவுப் பிறப்பித்துள்ளதுக் குறிப்பிடத் தக்கது.

இதற்கிடையில் வயது மூப்புக் காரணமாக தம்மை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் சமர்ப்பித்திருந்த மனு நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.

0 Responses to கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட பத்து பேர் மீது வழக்குப் பதிவு செய்ய டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் உத்தரவு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com