Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது புறக்கணிப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய தீர்மானித்துள்ளது.

அரசியலமைப்பில் 19வது திருத்தம் தொடர்பில் தாம் முன்வைத்த யோசனைகள் குறித்து சிறீலங்கா சுதந்திர கட்சி இறுதி முடிவு அறிவிக்காததால் இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக ஜாதிக ஹெல உறுமய விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு முன்னர் யாப்பு மாற்றம் மற்றும் அரசியல் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என ஹெல உறுமய அரசாங்கத்திடம் யோசனை முன்வைத்துள்ளது. இந்த யோசனைகள் குறித்து ஆராய குழுவொன்று அமைக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to வரவு செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பை புறக்கணிக்க ஜாதிக ஹெல உறுமய தீர்மானம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com