ஜாதிக ஹெல உறுமய முன் வைக்கும் அரசியலமைப்பு திருத்த யோசனைகளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் ஏற்றுக் கொள்ள விட்டால், முக்கிய அமைச்சர்கள் சிலருடன் தாம் பிரிந்து செல்லப்போவதாக ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
ஜாதிக ஹெல உறுமய தனது அரசியலமைப்பு திருத்த யோசனைகளை வரும் 14ஆம் திகதி கொழும்பில் வெளியிடவுள்ளது. எனினும், இந்த அரசியலமைப்பு திருத்த யோசனையில் கூறப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை அரசாங்கம் நீக்குமா என்பதில் தமக்கு சந்தேகம் நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த விடயம் தொடர்பில் ஏனைய கட்சிகளுடன் ஜாதிக ஹெல உறுமய பேசி வருவதாகவும், நாட்டுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்க கூடிய வகையிலேயே தமது அரசியலமைப்பு திருத்த யோசனைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தமது திருத்த யோசனைகளில் ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல் இரண்டையும் ஒன்றாக நடத்த வேண்டும் என்பதுடன், ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்தக் கூடிய யோசனைகள் அடங்கியுள்ளதாக அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
இந்த யோசனைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ஏற்காது விட்டால், அரசாங்கத்துக்குள் பெரும் மாற்றங்கள் ஏற்படும் என்பதை தன்னால் உறுதியாக கூறமுடியும் என்று தெரிவித்துள்ள அவர், அரசாங்கத்தின் முக்கிய ஐந்து அமைச்சர்கள் தங்களுடன் இணைந்து அரசாங்கத்திலிருந்து விலகுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to அரசியலமைப்பு திருத்த யோசனைகளை ஏற்காவிட்டால், அரசாங்கம் பிளவுபடும்: ஜாதிக ஹெல உறுமய