மஹிந்த ராஜபக்ஷவுக்கு, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரிக்கும் இடையில் நியூயோர்க்கில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடர்பில் எந்தவொரு உத்தியோகபூர்வ அறிக்கைகளையும் இலங்கை அரசாங்கம் வெளியிடவில்லையென வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்கச் செயலாளருக்கும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ‘அமெரிக்காவின் நிலைப்பாடு தளர்ந்துள்ளது’ என இலங்கை அரசாங்கம் கூறியிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இது தொடர்பாக விளக்கமளிக்கும் நோக்கில் வெளிவிவகார அமைச்சு நேற்று திங்கட்கிழமை அறிக்கை யொன்றை வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், அமெரிக்க இராஜாங்கச் செயலாளருக்கும் இடையில் நியூயோர்க்கில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடர்பில் எந்தவொரு உத்தியோகபூர்வ அறிக்கையினையும் அரசாங்கம் வெளியிடவில்லை. அறிக்கையொன்றை வெளியிட்டதாக கூறப்படும் செய்திகளை மறுக்கின்றோம். இரு நாட்டுக்கும் இடையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தையை வரவேற்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
இவ்வாறானதொரு சந்திப்பு நடைபெற்றது என்பது ஜோன் கெரியின் நிகழ்ச்சி நிரலிலேயே பகிரங்கப்படுத்தப்ப ட்டிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

0 Responses to ஜோன் கெரியுடனான ஜனாதிபதியின் சந்திப்பு தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்புகளை வெளியிடவில்லை: வெளிவிவகார அமைச்சு