Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்னும் இரண்டு வருடங்களுக்குள், அதாவது 2016 ஆம் ஆண்டு நாட்டிலுள்ள சேரிப்புறங்களை அகற்றி, அதற்குப் பதிலாக அனைவருக்கும் வீடுகளில் வசிப்பதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுத்தருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகளுக்கும் வீடு கிடைக்க வேண்டுமென்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதற்காக அரசாங்கம் கடந்த காலங்களில் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறார்களுக்கு சிறந்த வாழ்வை பெற்றுக்கொடுத்து அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தயாராகவிருப்பதாகவும், போதைப்பொருட்களில் இருந்து எதிர்கால சந்ததியினரை பாதுகாக்கும் பொறுப்பை உரியவகையில் நிறைவேற்றுவதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

0 Responses to இரண்டு வருடங்களுக்குள் நாட்டிலுள்ள சேரிப்புறங்கள் ஒழிக்கப்படும்: மஹிந்த

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com