Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் நிலவுகின்ற பிரச்சினைகளுக்கு உள்நாட்டிற்குள்ளேயே தீர்வு காண்பதற்கான சந்தர்ப்பம் காணப்படுகின்றது. எனவே, அதில் தலையிடுவதற்கான எவ்வித பண்பாட்டு ரீதியான உரிமையும் சர்வதேச சமூகத்திற்கு கிடையாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வத்திகானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி, இத்தாலியின் ரோம் நகரிலும்- ஐரோப்பாவிலும் வாழ்கின்ற இலங்கை சமூகத்தினரை சந்தித்தபோதே இந்த விடயங்களைக் கூறியுள்ளார்.

இலங்கையில் ஆகக்கூடிய தேர்தல்கள் தமது ஆட்சிக்காலத்திலேயே நடத்தப்பட்டுள்ளதாகவும், நாட்டில் ஜனநாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை இதன்மூலம் தெளிவாவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் விடயங்களில் தலையிடுவதன் ஊடாக, நாட்டில் ஸ்திரமின்மையை தோற்றுவிப்பதற்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு புத்துயிர் அளிப்பதற்கும் முயற்சிகள் இடம்பெறுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிற்கு எதிரான போலியான பிரசாரங்களையும், கருத்துகளையும் தோற்கடிப்பதற்கும், இலங்கையின் தனித்துவத்தைப் பாதுகாப்பதற்கும் முன்வருமாறு இலங்கை சமூகத்தினரிடம் ஜனாதிபதி கேட்டுக்கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

0 Responses to இலங்கையின் உள்ளக விடயங்களில் சர்வதேசம் தலையிட முடியாது: மஹிந்த

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com