மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும் என்றும், அதில் எந்தவித சட்டச் சிக்கலும் இல்லை என்றும் சிரேஷ்ட சட்டத்தரணி கோமின் தயாசிறி மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி நிஹால் ஜயமன்ன ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாகப் போட்டியிட அரசமைப்பில் எந்தச் சட்ட சிக்கலும் இல்லை. சிலர் இறந்து அடக்கம் செய்யப்பட்ட சட்டங்களுக்கு உயிர்கொடுக்க முயற்சிக்கின்றனர் என்று அவர்கள் இருவரும் குறிப்பிட்டுள்ளனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது என்று ஒரு சிலரால் முன்வைக்கப்படும் தர்க்கம் விவாதிக்கப்பட வேண்டிய விடயமே அல்ல. அவ்வாறு ஒரு பிரச்சினையே சட்டத்தில் இல்லை. ஜனாதிபதியால் அடுத்த தேர்தலில் போட்டியிட முடியும். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்காவும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடலாம் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சிரேஷ்ட சட்டத்தரணி கோமின் தயாசிறி மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி நிஹால் ஜயமன்ன ஆகியோர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“அரசமைப்பின் 31வது சரத்து மற்றும் 92வது சரத்து என்பனவே ஜனாதிபதித் தேர்தல் குறித்து குறிப்பிடுகின்றன. 92வது சரத்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதிகள் குறித்து குறிப்பிடுகின்றது. 31வது சரத்தின் இரண்டாவது பிரிவானது ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு தடவைகள் போட்டியிட்டு வெற்றியீட்டிய ஒருவர் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது என்று கூறுகின்றது.
ஆனால், கடந்த 2010ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி நாட்டில் 18வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அந்தச் திருத்தச் சட்டத்தின் ஊடாக அரசமைப்பின் 31வது சரத்தின் 2ஆம் பிரிவு நீக்கப்பட்டுவிட்டது.
அவ்வாறெனில் ஒருவர் எத்தனை தடவைகளும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும். அதற்கு முன்னர் இரண்டு தடவைகள் பதவி வகித்திருந்தாலும் போட்டியிடலாம். இதில் கேள்வி எழுப்புவதற்கு எவ்விதமான சந்தேகங்களும் இல்லை.
அதாவது ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்யப்படும்போது உள்ள சட்டத்தின் பிரகாரமே தகுதிகள் பார்க்கப்படும். அந்தவகையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாம் தடவையாக போட்டியிடுவதில் அரசமைப்பில் எவ்விதமான சட்டச் சிக்கலும் இல்லை.
காரணம் அரசமைப்பின் 31வது சரத்தின் 2ஆம் பிரிவு தற்போது அமுலில் இல்லை. இல்லாத சட்டத்தைப் பற்றி பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா ஒரு கருத்து முன்வைத்துள்ளார். ஆனால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் மூன்றாவது தடவையாகவும் போட்டியிட முடியும். பல உதாரணங்களை இதற்கு எம்மால் கூறமுடியும்" என்றுள்ளனர்.

0 Responses to மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும்?