Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கூட்டமைப்பில் பிளவுகள் இல்லை என்று ரெலோ அமைப்பின் தேசிய அமைப்பாளரும் வடமாகாண சபை உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். கூட்டணி என்று இருக்கும் போது அதற்குள் பல்வேறு கருத்துக்கள் காணப்படும். இதனை முன்வைத்து கூட்டமைப்பு பிளவடைந்துவிட்டதாக சில சக்திகள் செய்திகளை பரப்பி வருகின்றன. அவற்றில் உண்மை இல்லை.

கூட்டமைப்பில் உள்ள அனைத்து கட்சிகளும் தங்களின் நோக்கத்துக்காக ஒன்றிணைந்து முன்னோக்கி செல்லும் என்று அவர் கூறியுள்ளார்.

இன்றைய அரச பத்திரிகை ஒன்றில் வெளியாகி இருந்த செய்தியில், இலங்கை தமிழரசு கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் அனைத்தும் தனித்து செயற்படவிருப்பதாக கூறப்பட்டிருந்தமைக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையிலேயே சிவாஜிலிங்கம் இதனைக் கூறி இருக்கிறார்.

0 Responses to கூட்டமைப்பில் பிளவுகள் இல்லை – சிவாஜிலிங்கம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com