சென்னை செல்லும் சுப்ரமணியம் சுவாமிக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஜனாதிபதியுடன் கைகோர்த்துக்கொண்டு, ஈழத்தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கை களில் ஈடுபடுகிறார் என்று சுப்பிரமணியசாமி மீது தமிழர்களிடையே எதிர்ப்பு நிலவுகிறது.
மேலும், ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கை முதலில் தொடுத்தவர் என்கிற முறையிலும், தற்போது ஜெயலலிதா பிணைக்கு எதிராக செயல்படுவேன், பிணை கிடைக்க முடியாதபடி செய்வேன் என்று அறிவித்துள்ளதாலும் அதிமுகவினரிடையே எதிர்ப்பு நிலவுகிறது.
ஜெயலலிதா சிறைசென்ற விவகாரத்தில் அ.தி.மு.க.வினர் நடத்திய பல்வேறு போராட்டங்களின் போது சுப்பிரமணியசாமி உருவப்பொம்மை எரிக்கப்பட்டது. சென்னையில் உள்ள அவரது வீடு மீதும் கல்வீசி தாக்கினர்.
இந்த நிலையில் டெல்லியில் இருந்து இன்று இரவு 11.30 மணி அளவில் சுப்பிரமணியசாமி விமானத்தில் சென்னை வருகிறார்.
நாளை அவர் பிரிட்டிஷ் கவுன்சிலில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்கிறார். பின்னர் சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்பு தண்டனையில் இருந்து ஜெயலலிதா பிணை கேட்கும் விவகாரம், தமிழக சட்டம் ஒழுங்கு விவகாரம் ஆகியவை குறித்து முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார் என தமிழக ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
மேலும் சென்னைவரும் சாமிக்கு பலத்த பாதுகாப்பு அளிக்க பொலிசார் முடிவு செய்து உள்ளனர்.
ஏற்கனவே சுப்பிரமணியசாமி இசட் பிரிவில் பாதுகாப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to பலத்த பாதுகாப்புடன் தமிழகம் செல்லும் சு சுவாமி!