மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஊழல் மோசடி மிக்க அரசாங்கத்தை தோற்கடிப்பதற்காக பொது எதிரணி முன்னெடுத்துள்ள ‘மை3 ஒப்ரேஷன்’ வெற்றிபெறும் என்று ஜனநாயகக் கட்சியின் தலைவரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவுக்கு 65 வீதத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பிலிருந்து வெளிவரும் தமிழ் ஊடகமொன்றுக்கு எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே சரத் பொன்சேகா மேற்கண்ட விடயங்களைக் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, "பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி தற்போது உறுதியாகி விட்டது. 2010 ஆம் ஆண்டிலும் நாம்தான் வெற்றி பெற்றோம். எனினும், அந்த வெற்றி திட்டமிட்ட அடிப்படையில் கொள்ளையிடப்பட்டது. இம்முறை தற்போதே நாம் வெற்றி பெற்றுவிட்டோம். 100 இற்கு 65 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகள் மைத்திரிபால சிறிசேனவுக்கு கிடைப்பது உறுதி.
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். எனவே, 'மை 3 ஒப்ரேஷன்' வெற்றியளிப்பது உறுதி.
அதேவேளை,பொதுவேட்பாளருக்கு வாக்களிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பகிரங்கமாக அறிவித்தால், அதனைப் பயன்படுத்தி - கூட்டமைப்பைக் குறிவைத்து அரசியல் இலாபம் தேடுவதற்கு அரசாங்கம் நிச்சயம் முயற்சிக்கும். தமிழ் இனவாதிகளுடன் இணைந்து நாட்டை பிரிக்கும் முயற்சி இடம் பெறுகின்றது என்ற போலிப் பரப்புரையை ராஜபக்ஷக்கள் முன்னெடுக்கலாம்.
எனவே, மோசடியாளரிடம் இருந்து நாட்டை மீட்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமல்ல, ஒவ்வொரு பிரஜைகளும் சிந்திக்கவேண்டும். அவ்வாறு சிந்தித்து செயற்பட்டால் எவ்வித பிரச்சினையும் ஏற்படாது" என்றுள்ளார்.

0 Responses to ‘மை3 (MY3) ஒப்ரேஷன்’ வெற்றிபெறும்: பொன்சேகா