ராஜிவ்காந்தி கொலை வழக்குத் தொடர்பில் நீண்டகாலமாகச் சிறைவைக்கபட்டிருக்கும், பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு சமர்ப்பித்த பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்திருக்கிறது.
மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடந்த மார்ச் மாதம் தமிழக தலைமைச்செயலாளர் கடிதம் மூலம் இதனைத் தெரியப்படுத்தியிருந்தார். வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரும் ஏற்கனவே 24 ஆண்டுகள் சிறையில் இருப்பதால் அவர்களை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதையும், இது தொடர்பில் மத்திய அரசின் கருத்தை தெரிவிக்க வேண்டும் எனவும் அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்ருந்ததாகத் தெரிய வருகிறது.
மத்திய அரசு, 7 பேர் விடுதலை தொடர்பான வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், அவர்களை விடுவிக்க அதிகாரமில்லையென, இப்பரிந்துரைக் கோரிக்கைக்கு மத்திய அரசு மறுப்புத் தெரிவித்து, பரிந்துரையை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 Responses to பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை - தமிழக அரசின் பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்தது