Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவதற்காக வெளிநாடுகளிலிருந்து வரும் கண்காணிப்பாளர்கள், வடக்கு பகுதிக்கு செல்வதாயின் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “வடக்கு பகுதிக்கு வெளிநாட்டவர்கள் வருவதற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை பாதுகாப்பு அமைச்சு இன்னமும் நீக்கவில்லை. பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றி வெளிநாட்டவர்கள் அங்கு செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். இது தொடர்பாக இது வரை தேர்தல் ஆணையாளர் பாதுகாப்பு அமைச்சிடம் உத்தியோகபூர்வ வேண்டுகோள் எதனையும் விடுக்கவில்லை.

வடக்கில் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடவுள்ள வெளிநாட்டவர்கள் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையாளர் பாதுகாப்பு அமைச்சிற்கு அனுப்பி அனுமதியைப் பெறவேண்டும். தேர்தல் ஆணையாளரின் பரிந்துரைகள் இல்லாவிட்டால் அவர்கள் என்ன நோக்கத்திற்காக அங்கு செல்கின்றனர் என்பது எங்களுக்கு தெரியாது” என்றுள்ளார்.

0 Responses to வடக்கிற்கு வரும் தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி அவசியம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com