Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திலிருந்து விலகி பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதற்கு சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பிர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் 15 தடவைகளுக்கும் மேலாக சந்தித்துப் பேசிவிட்டனர்.

இதன்போது, ஒரு தரப்பு தொடர்ந்தும் அரசாங்கத்தோடு இணங்கியிருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளது. ஆனாலும், இன்னொரு தரப்பு முஸ்லிம் மக்களின் முடிவு அரசாங்கத்திற்கு எதிராக உள்ள நிலையில், மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க வேண்டும் வலியுறுத்தியுள்ளது.

இந்த இழுபறிகளின் பின்னணியில், இறுதியாக பொது எதிரணியில் இணைந்து மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பது என்று முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாகவும், அந்த அறிவிப்பு நாளை திங்கட்கிழமை வெளியிடப்படும் என்றும் தெரிகிறது.

0 Responses to முஸ்லிம் காங்கிரஸ் மைத்திரியை ஆதரிக்க முடிவு; நாளை பொது எதிரணியோடு இணைகிறது?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com