முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்கியுள்ள போதிலும், அவர் இழந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியை மீண்டும் பெற்றுக் கொள்ள முடியாது என்று சிரேஷ்ட சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
2010ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு சரத் பொன்சேகா பாராளுமன்ற உறுப்பினர் ஆகியிருந்தார்.
ஆனாலும், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் அவருக்கு எதிராக இராணுவக் குற்றங்கள் சாட்டப்பட்டு அவரது உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டன. அதனால், அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இழந்திருந்தார்.
சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்துக்கு ஜனநாயகக் கட்சியின் ஜயந்த கெட்டகொட நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், சரத் பொன்சேனாவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் பொது மன்னிப்பு வழங்கினார்.
இதனால், அவர் ஜயந்த கெட்டகொடவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு மீண்டும் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும், சட்ட ரீதியாக அதற்காக ஏற்பாடுகள் ஏதும் இல்லை என்று சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

0 Responses to பொன்சேகா இழந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியை மீண்டும் பெற முடியாது!