இலங்கைக்கான மூன்று நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹ்யூகோ ஸ்வைர் உள்ளிட்ட குழுவினர், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று வியாழக்கிழமை சந்தித்துப் பேசியுள்ளனர்.
இதன்போது, இராணுவம் வசமுள்ள காணிகள் தொடர்பில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சருக்கு தாம் தெளிவுபடுத்தியதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, சர்வதேச விசாரணைகள் குறித்தும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹ்யூகோ ஸ்வைருடன் உரையாடியதாக அவர் கூறியுள்ளார்.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹ்யூகோ ஸ்வைர் உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாணம் சுன்னாகம் சபாபதிப்பிள்ளை அகதி முகாமிற்கு சென்று அங்குள்ள நிலவரங்களை நேரில் கண்டறிந்தனர்.
உயர்பாதுகாப்பு வலயம் காரணமாக முகாம்களில் தங்கியுள்ள வலிகாமம் வடக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது ஹ்யூகோ ஸ்வைர் கேட்டறிந்தார்.
வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் இராணுவத்தினரால் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்ட பகுதிகள் தொடர்பாக வரைபடங்களுடன் ஹ்யூகோ ஸ்வைரிற்கு வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றக் குழு விளக்கமளித்தது சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to இலங்கை வந்துள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வடக்கு முதலமைச்சரைச் சந்தித்துப் பேசினார்!