Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்கள் யாராவது நாட்டைவிட்டுத் தப்பிச் சென்றிருந்தால், அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சர்வதேசப் பொலிஸாரின் உதவியோடு அவர்கள் கைது செய்யப்படுவார்கள். அதுவொன்றும் அவ்வளவு சிரமமான விடயமல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச வலையமைப்பின் பொறுப்பாளராக இருந்த கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனுக்கு எதிராவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.

கே.பி.க்கு எதிராக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவர் பல கடவுச்சீட்டுகளை வைத்திருந்தார் என்றும், பத்துக்கு மேற்பட்ட பெயர்களில் நடமாடியுள்ளார் என்றும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் அமைச்சர் ராஜிதன சேனாரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to ஊழல் செய்தவர்கள் தப்பிக்க முடியாது; வெளிநாடு சென்றிருந்தாலும் கைது செய்வோம்: ராஜித சேனாரத்ன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com