வடமாகாணசபை வினைத்திறமையுடன் செயற்படவேண்டுமென்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும். அதற்காக முதலமைச்சரிற்கும் அமைச்சரவைக்கும் முழுமையான ஆதரவை வழங்க நாங்கள் தயாராக இருக்கின்றோம். ஆனால் செய்யக்கூடியவற்றை கூட செய்யாது வெறுமனே ஆட்சிக்கதிரையில் இருந்து காலம் ஓட்டுவதை அனுமதிக்க முடியாதெனத் தெரிவித்துள்ளார் வடமாகாணசபையின் பிரதி அவை தலைவர் அன்ரனி ஜெகநாதன்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை அவர் ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாடியிருந்தார். தன் மீது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சிலர் அரச பக்கம் சாய்ந்துவிட்டதான குற்றச்சாட்டுக்கள் எழுப்பிவருவது தொடர்பாக அங்கு விளக்கமளித்த அவர் மேலும் தெரிவிக்கையில்:-
கடந்த மாகாணசபை அமர்வில் நான் ஆற்றிய உரை கூட்டமைப்பிலுள்ள சிலரை கோபம் கொள்ள வைத்துள்ளது. ஒரு வருடம் கடந்துவிட்ட நிலையில் வாக்களித்த மக்களிற்கு எதையும் செய்யமுடியாத இயலாமையில் நாங்கள் பேசுகின்றோம். எங்களில் சிலருக்கு பேசுவதற்கு போதிய தகமையும் இருப்பதாக கருத்துகின்றோம். நான் முள்ளிவாய்க்காலில் அனைத்தையும் இழந்தும் இன்று வரை என் மண்ணில் நிற்பவன். மகனொருவனை மாவீரனாகக் கொடுத்தவன். அனந்தி தனது கணவரை காணாமல் போக கொடுத்துவிட்டு அலைகின்றார். இவ்வாறான நாம் எம்மக்களிற்கு பேசாமல் என்ன செய்ய சொல்கிறீர்கள்.
முடியாதவற்றைச் செய்யுமாறு நாம் கூறவில்லை. முதலமைச்சர் வசம் உள்ளுராட்சி மன்றங்கள் இருக்கின்றன. கூட்டுறவு அமைப்புக்கள் இருக்கின்றன. இவற்றிலுள்ள சிறு பிரச்சினைகளை கூட தீர்க்க முதல்வரால் முடியாதுள்ளது. அவருடன் முதலமைச்சர் பதவியேற்ற பின்னர் பேசக்கூட முடியவில்லை. தொலைபேசி அழைப்புக்களிற்கு பதிலளிப்பதில்லை. கடிதங்களிற்கு பதிலளிப்பதில்லை. எனக்கு மட்டுமல்ல எல்லா உறுப்பினர்களிற்கும் இதே நிலைதான்.
எமக்கு வாக்களித்த மக்களிற்கு எதையாவது செய்ய வேண்டும். ஒரு வருடம் கடந்தும் இரண்டு நியதிச்சட்டங்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. அமைச்சர்கள் என்ன செய்கின்றார்கள். அமைச்சர் டெனீஸ்வரன் மட்டும் கொழும்பு சென்று சட்டவாளர்களுடன் பேசி தனது அமைச்சு தொடர்பில் சில நியதிச்சட்டங்களை தயாரித்து சமர்ப்பிக்க தயாராகவுள்ளார். ஏன் மற்றவர்களால் அவ்வாறு முடியாதுள்ளது.
இன்னொரு அமைச்சர் கூட்டமொன்றில் பேசுகையில் தனது ஒதுக்கீடுகள் பற்றி பேசுகின்றார். பேரவையில் பேசிய விடயத்திற்கு ஏன் கூட்டமொன்றில் பதிலளிக்க வேண்டும். எனக்கு அங்கல்லவா பதிலளித்திருக்கவேண்டும். எமது மக்களிற்கு கிடைக்க வேண்டுமென குரல்கொடுத்தால் பிரதேசவாசமென்கின்றனர்.
இன்னொருபுறம் அரசிடம் சோரம் போனதாக சொல்கிறார்கள். நான் ஒன்றும் எனது பிள்ளைகளை இந்தியாவில் அனுப்பி படிப்பிக்க அரசிடம் சோரம் போகவேண்டிய தேவையிருக்கவில்லை. இருந்த மகனையும் போராட அனுப்பி மாவீரனாக்கினேன்.
இறுதி யுத்த அவலங்களைத் தாங்கி நிற்கும் சாட்சிகளுள் நானுமொருவன். கல்லறைகள் கூட இன்றி அந்தரித்து திரியும் மாவீரர்களிற்கும் அந்த மக்களிற்கும் துரோகம் இழைக்காதீர்கள். அவர்கள் எம்மவர்கள். போராட்டத்திற்கென புறப்பட்ட அனைத்து இயக்கங்களும் பிள்ளைகளும் புனித நோக்கிற்காக புறப்பட்டவர்களே. அனைவரும் இப்போது திரும்பும் போது அவர்களது போராட்டங்களை கொச்சைப்படுத்தி பிரிவுகளை ஏற்படுத்த வேண்டாமென கேட்டுக்கொள்கின்றேன். அதற்கான தகுதி இவர்களிற்கு இல்லையென்பதையும் கூறவிரும்புகின்றேன்.
முதலமைச்சரிற்கோ அமைச்சரவைக்கோ நாம் எதிரானவர்கள் அல்ல. மக்களிற்கு செய்யமுடிந்தவற்றை அவர்கள் செய்யட்டும். அதற்கு நாங்கள் தோள் கொடுப்போம். அதனைவிடுத்து வீதிகளில் நின்று விமர்சனங்கள் செய்தால் அதற்கு நாமும் தயார் என அவர் மேலும் தெரிவித்தார். இப்பத்திரிகையாளர் மாநாட்டில் அவருடன் மற்றொரு உறுப்பினரான அனந்தி சசிதரனும் பிரசன்னமாகியிருந்தார்.

0 Responses to வடமாகாணசபைக்குள் என்ன முரண்பாடு? என்ன நடக்கிறது? விளக்குகிறார் பிரதி அவை தலைவர் கோரிக்கை!