இலங்கை மீதான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசாரணை அறிக்கை ஒத்திவைக்கப்பட்டதை வரவேற்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, ஆனாலும், இலங்கைக்கான அச்சுறுத்தல் இன்னமும் நீங்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
“விசாரணை அறிக்கை பின்போடப்பட்டதால் எமது நாட்டிற்கு எதிரான அச்சுறுத்தல் ஓய்ந்துவிட்டது என்று எண்ணிவிட முடியாது. இன்னும் அச்சுறுத்தல் இருக்கவே செய்கிறது. வடக்கு மாகாண சபையில் சர்வதேச விசாரணை நடத்துமாறு கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனடிப்படையில், இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்துமாறு பல டயஸ்போரா அமைப்புகள் மனித உரிமைகள் பேரவையை கோரியுள்ளன. எனவே எமக்கு எதிரான சர்வதேச அழுத்தங்கள் தொடர்ந்தும் இருக்கவே செய்கிறது” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to ஐ.நா. விசாரணை அறிக்கை ஒத்திவைக்கப்பட்டாலும், அச்சுறுத்தல் நீங்கவில்லை: நிமல் சிறிபால டி சில்வா