Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

குஜராத் மாநிலம் சூரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் உடை மற்றும் அவருக்கு வந்த பரிசுப் பொருட்கள் ஏலத்துக்கு விடப்பட உள்ளன.

நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் இந்திய குடியரசு தின விழாவில் கலந்துக்கொண்ட போது, மிகவும் விலையுயர்ந்த ஆடை அணிந்திருந்தார் என்று சர்ச்சை கிளம்பியது.உடை கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்டது என்றும் கூறப்பட்டது.ஆனால், அந்த உடை அவருக்கு ஆடை வடிவமைப்பு நிறுவனம் ஒன்று பரிசாக வழங்கியதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் இதுவரை நரேந்திர மோடிக்கு வந்த பரிசுப் பொருட்களுடன் அவர் பயன்படுத்திய ஆடைகள் ஏலத்தில் விடப்பட உள்ளன என்று தெரிய வருகிறது.

மோடி குடியரசு தினத்தன்று அணிந்திருந்த சரச்சைக்குரிய உடையை ஒருவர் 51 லட்சம் ரூபாய்க்கும், ஒருவர் ஒரு கோடி ரூபாய்க்கும் ஏலம் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று முதல் மூன்று  நாட்கள் ஏலத்தில் விட இருக்கும் 361 பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டு, பின்னர் ஏலத்துக்கு விடப்படும் என்று தெரிய வருகிறது.


0 Responses to நரேந்திர மோடியின் உடை மற்றும் பொருட்கள் ஏலம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com