Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கண்டியில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் வாடகை வீட்டிலிருந்து ஒரு தொகைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த வீட்டிலிருந்து ஒரு தொகை பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி புஷ்பதான மாவத்தையிலுள்ள குறித்த வீட்டிற்கு நேற்று பிற்பகல் இந்தப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

கொழும்பு கறுவாத்தோட்டம் – கெப்பட்டிபொல பகுதியிலுள்ள கெஹலிய ரம்புக்வெல்லவின் வீட்டிலிருந்து மூன்று லொறிகளில் இந்த பொருட்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

இந்த பொருட்களுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் உருவம் பொறிக்கப்பட்ட கையொப்பத்துடனான கோப்பைகளும் காணப்படுகின்றன.

0 Responses to கெஹலிய வீட்டில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் தொடர்பில் விசாரணை ஆரம்பம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com