Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் 67வது சுதந்திர தினம் நாளை புதன்கிழமை (பெப் 04) கொண்டாடப்படவுள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைவரையும் நாளை காலை 09.30 மணிக்கும் 09.34 மணிக்கும் இடையான காலப்பகுதியில் வீட்டுக்கு முன்னால் விளக்கொன்றை ஏற்றி பிரார்த்திக்குமாறு அரசாங்கம் கோரியுள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து இன- மத மக்களும் ஒன்றாக இணைந்து, எதிர்கால சந்ததியினருக்கு சுதந்திர நாடொன்றை கிடைக்க பிரார்த்திப்போம் என்று வேண்டிக்கொண்டு இந்த விளக்கை ஏற்றுமாறு உள்விவகார அமைச்சு விடுத்துள்ள வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to எதிர்கால சந்ததியினருக்கு சுதந்திரமான நாடு கிடைக்க விளக்கேற்றி பிரார்த்திப்போம்: அரசாங்கம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com