Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் முகமாக ஒரு பொதுவான நாள் ஒன்றை சமாதானத்துக்கான நாளாக அனுஸ்டிக்க முடியுமா என்பது குறித்து தாம் ஆராய்வதாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இலங்கை விவகாரத்துக்கு பொறுப்பாகவுள்ள லோர்ட் நசெபி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு நேற்று திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்ட இவர், வடமாகாண ஆளுநர் எச்.என்.ஜி.எஸ்.பள்ளிகஹக்கார, யாழ்.மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், சிவில் சமூகப் பிரதிகள் உள்ளிட்ட பல்வேறுபட்ட தரப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடினர்.

பின்னர் மாலை ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடியபோது நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு போரில் உயிரிழந்த பொதுமக்கள் விடுதலைப்புலி உறுப்பினர் மற்றும் இராணுவத்தினர் ஆகியோரை நினைவுகூரும் முகமாக ஒரு நாளை தெரிவு செய்து அந்த நாளை சமாதானத்துக்கான நாளாக அனுஸ்டிக்க சாத்தியங்கள் உள்ளதா என ஆராய்ந்து வருகின்றோம்.

அவ்வாறானதொரு நாளை அனுஸ்டிக்கும் நிலை நிச்சயமாக உருவாக வேண்டும். அந்நாளே சமாதானத்துக்கான நாளாக இருக்கும்' என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு ஒன்று கிடைக்கும் என தமிழ் மக்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். அதேவேளை புலம்பெயர்ந்தவர்களும் நம்பிக்கையுடன் இருக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to மாவீரர் தினம் வேண்டாமாம்! இலங்கை விவகாரத்துக்கான லோர்ட் நசெபி!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com