Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை கட்டுப்படுத்தி அதிகாரங்களை பாராளுமன்றத்துடன் பகிர்வதை உறுதி செய்யும் 19வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றக் கோரி மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலேயே இந்தப் போராட்டத்தை இன்று மாலை 04.00 மணியளவில் முன்னெடுக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸ்ஸநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு வழிவகுக்கும் 19வது திருத்தச்சட்டமூலம் நிறைவேற்றப்படுவது சிலருடைய சதி முயற்சிகளால் இழுபறிநிலையில் உள்ளது. இதற்கு எதிராக மக்களையும் இணைத்துக்கொண்டு வீதியில் இறங்கத் தீர்மானித்திருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to 19வது திருத்தத்தை நிறைவேற்றக் கோரி ஜே.வி.பி இன்று ஆர்ப்பாட்டம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com