முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவை நாட்டுக்கு திரும்பி வர வேண்டாம் என்று தான் வலியுறுத்தியதாகவும், ஆனாலும், அவர் தன்னுடைய அறிவுரையைக் கேட்காமல் வந்து இப்போது சிறையில் இருக்கின்றார் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மாத்தளை, புருக்கல ஸ்ரீ தம்மசித்தியாராமய விகாரைக்கு நேற்று வியாழக்கிழமை சென்ற முன்னாள் ஜனாதிபதி அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றினார். அதன்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது, “எனது சகோதரன் பஷில் ராஜபக்ஷ அமெரிக்காவில் இருக்கும் போது, அவனைத் தொடர்புகொண்டு நான் கதைத்தேன். அப்போது, இலங்கைக்கு மீண்டும் வர வேண்டாம், அவ்வாறு வந்தால் கைது செய்வார்கள் என்று நான் அறிவுறை கூறினேன்.
இருப்பினும், 'நான் களவு செய்யவில்லை. நான் வராமளிருப்பது மஹிந்த அண்ணான உங்களுக்கு அவமானம். அதனால் நான் இலங்கைக்கு வருவேன்' என்று அவன் பதிலளித்தான். ஆனால், நான் அவனிடம் சொன்னது போலவே நடந்தேறிவிட்டது. இருப்பினும் பரவாயில்லை. நானும் 3 மாதங்கள் சிறையில் இருந்தவன் தான். பாராளுமன்ற உறுப்பினரொருவர் ஓரிரு மாதங்கள் சிறைவாசம் அனுபவித்து வந்தால் தவறில்லை.” என்றுள்ளார்.
0 Responses to நான் வர வேண்டாம் என்றேன்; அவன் வந்தான்: மஹிந்த