போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்ட முக்கியமான ஆறு ஒப்பந்தங்கள் இலங்கைக்கும்- பாகிஸ்தானுக்கும் இடையில் நேற்று திங்கட்கிழமை கைச்சாத்திடப்பட்டுள்ளன.
பாகிஸ்தானுக்கான விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை சென்றார். அங்கு அவருக்கு பூரண அரசு மரியாதை அளிக்கப்பட்டது.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இருதரப்பு உறவுகள் தொடர்பிலான பேச்சுவார்த்தை பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது.
இதன்போதே, போதைப்பொருள், சுவாசக்கட்டமைப்பிற்குக் கேடு விளைவிக்கும், அவற்றை உற்பத்தி செய்ய பயன்படுத்தும் மூலப்பொருட்கள் போன்றவற்றை சட்டவிரோதமாக விநியோகம் செய்வதை முழுமையாக நிறுத்துவது உட்பட இரண்டு ஒப்பந்தங்கள் மற்றும் மேலும் நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
கைச்சாத்திடப்பட்ட ஏனைய ஒப்பந்தங்கள் பின்வருமாறு,
பாகிஸ்தான் தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகம் மற்றும் சர்வதேச நல்லுறவுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் நிலையம் ஆகியவற்றுக்கிடையிலான பரிமாற்றம், ஒத்துழைப்பு மற்றும் ஆராய்ச்சி தொடர்பான ஒப்பந்தம்.
இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் பாகிஸ்தான் தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஆகியவற்றுக்கிடையிலான ஒப்பந்தம்.
விளையாட்டுத்துறை அபிவிருத்தி தொடர்பான இரு நாடுகளுக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
பாகிஸ்தான் கப்பல் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை கப்பற் கூட்டுத்தாபனம் ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம், இலங்கையின் அணுசக்தி மற்றும் பாகிஸ்தான் அணுசக்தி ஆணைக்குழுவுக்குமிடையிலான அணுசக்தி ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகிய ஒப்பந்தங்களே நேற்று கைச்சாத்திடப்பட்டன.

0 Responses to மைத்திரியின் பாகிஸ்தான் விஜயம்; போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்ட 6 ஒப்பந்தங்கள் கைச்சாத்து!