Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஆட்சி மாற்றத்தினூடு தமிழ் மக்கள் எதிர்பார்த்த விடயங்கள் இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு நேற்று திங்கட்கிழமை விஜயம் செய்த அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ரொபின் மூடிக்கும், வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் இடையிலான சந்திப்பொன்று, முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் இடம்பெற்றது. சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ஒவ்வொரு வருடமும் வடக்குக்கு விஜயம் செய்து இங்குள்ள நிலைமைகள் தொடர்பாக கேட்டறிந்து செல்வார். இன்றைய சந்திப்பும் அவ்வாறானதொரு சந்திப்பே. ஆட்சிமாற்றம் எவ்வாறான நன்மை, தீமைகளை உருவாக்கியுள்ளது என்பது தொடர்பில் கலந்துரையாடினோம்.

அத்தோடு, இலங்கை அரசுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் நல்லதொரு புரிந்துணர்வை ஏற்படுத்த அவுஸ்திரேலியா எல்லா விதத்திலும் பாடுபடும் என்று அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் என்னிடம் கூறினார்.” என்றுள்ளார்.

0 Responses to ஆட்சி மாற்றம் எதிர்பார்த்த விடயங்களை சாத்தியமாக்கவில்லை: சி.வி.விக்னேஸ்வரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com