மே 18ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூருவதற்கு அனுமதிக்க முடியாது என்று அறிவித்துள்ள இலங்கை அரசாங்கம், ஆனால், மோதல்களில் உயிரிழந்த சொந்தங்களுக்கு வடக்கு மக்கள் அஞ்சலி செலுத்தலாம் என்று தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை மனிதாபிமான முறையில் இடம்பெறும். வடக்கு, கிழக்கு மக்கள் மத்தியிலுள்ள ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையைக் கலைந்து, நம்பிக்கையை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என்று அரச நிர்வாக, உள்ளூராட்சி மற்றும் ஜனநாயக ஆட்சி தொடர்பான அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கரு ஜயசூரிய கூறியுள்ளதாவது, "தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்த பணம் தொடர்பான தகவல்கள் தற்போதும் வெளிவந்துகொண்டிருக்கின்றன. புலிகளுடன் யார் தொடர்பு வைத்திருந்தார் என்ற தகவல்கள் வரும்காலத்தில் வெளிவரும்.
புலிகள் அமைப்பு தீவிரவாத அமைப்பாகும். இந்தியா உள்ளிட்ட நாடுகளில்கூட புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், புலிகளை நினைவுகூர அனுமதிக்க முடியாது. போரில் தமது உறவுகளை இழந்த வடக்கு மக்கள் உறவுகளை நினைவுகூரலாம். இறந்தவர்களை நினைவுகூருவது என்பது மனிதாபிமான நடவடிக்கை ஆகும். ஆனால், விடுதலைப்புலிகளை நினைவுகூர முடியாது.
வடக்கு, கிழக்கு மக்கள் மத்தியில் உள்ள அவநம்பிக்கையைப் போக்க வேண்டும். அந்த செயற்பாட்டைத்தான் அரசாங்கம் தற்போது செய்து வருகின்றது. அவர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.
வடக்கு மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் ஒரு சுமுக உறவு ஏற்பட்டு வருகின்றது. சில விடயங்கள் தொடர்பாக வடக்கு மக்கள் பொலிஸுக்குச் செல்வதில்லை. இராணுவத்தினரைக் கொண்டு அவற்றை சுமுகமாக முடித்துவிடுகின்றனர். இதுபோன்ற செயற்பாடுகளூடாக மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துவதே எமது நோக்கம்.” என்றுள்ளார்.

0 Responses to மே 18: புலிகளை நினைவுகூர முடியாது; உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தலாம்: அரசாங்கம்!