ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிராக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் உதய கம்மன்பில இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் காலத்தின் போது “தான் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால் ரணில் விக்ரமசிங்கவை 24 மணி நேரத்துக்குள் பிரதமராக நியமிப்பேன்” என்று மைத்திரிபால சிறிசேன இலஞ்ச வாக்குறுதி அளித்துள்ளதாக உதய கம்மன்பில தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, புதிய அரசாங்கத்தின் 100 நாட்கள் நிறைவடைந்துவிட்டன என்றும், இனி தங்களுடைய 100 நாட்களாகும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to மைத்திரி, ரணிலுக்கு எதிராக உதய கம்மன்பில ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு!