Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தேர்தல் சீர்திருத்தங்களை உள்ளடக்கிய 20வது திருத்தச் சட்டத்தினை ஆராய்வதற்கு அமைச்சரவை உபகுழுவொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் நேற்று புதன்கிழமை இரவு கூடிய அமைச்சரவை கூட்டத்தின் போதே மேற்கண்ட தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சரத் அமுனுகம தலைமையிலான இந்த அமைச்சரவை உபகுழுவில் அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, பாட்டாலி சம்பிக்க ரணவக்க, ரவூப் ஹக்கீம், பி.திகாம்பரம் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

அரசியலமைப்பின் 20வது திருத்தம் தொடர்பில் அரசியல் கட்சிகள் முன்வைத்துள்ள யோசனைகள், பரிந்துரைகளை இந்த உபகுழு விரிவாக ஆராயும். அதன் பின்னர் உபகுழுவினால் சமர்ப்பிக்கப்படுகின்ற அறிக்கை, அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஆராயப்படும் என்று ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to 20வது திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்கு அமைச்சரவை உபகுழு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com