சென்னை ஆர்.கே.நகர் எனப்படும் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத் தேர்தலில் திமுக போட்டியில்லை என்று அக்கட்சியின் தலைவர் மு.கருணாநிதி அறிவித்துள்ளார்.
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுதலையானதை அடுத்து ஆர்.கே.நகர் தொகுதி அதிமுக எம் எல் ஏ தமது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்தத் தொகுதி காலியானது., காலியான தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டு முறைப்படி சட்டமன்ற உறுப்பினராவார் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் அங்கு தேர்தல் திகதியும் அறிவிக்கப்பட நிலையில் இந்த இடைத் தேர்தலில் திமுக போட்டியிடப் போவதில்லை என்று அதன் தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இன்னும் 6 அல்லது 7 மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைப்பெற உள்ளதால், திமுக இந்த இடைத் தேர்தலில் போட்டியிடாது என்று கருணாநிதி அறிவித்துள்ளார். இதே போன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் போட்டியிடாது என்று திருமாவளவன் அறிவித்துள்ளார்.
0 Responses to ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் திமுக போட்டியில்லை:கருணாநிதி