Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் முதல்வர் பன்னீர் செல்வத்தை அவமதித்திக்கும் விதமாக அமைந்தது என்று அதிமுக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

எம்.எல். ஏ.,க் களை நோக்கி, இரு நாற்காலிகள் மட்டும் போடப் பட்டிருந்தன.
அவற்றில், பொது செயலாளர் சசிகலாவும், அவைத் தலைவர் மதுசூதனனும்
அமர்ந்திருந்தனர்.

முதல்வர் பன்னீர் செல்வம், எம்.எல்.ஏ.,க் களோடு, முதல் வரிசையில்
அமர்ந்திருந்தார். இது, எம்.எல்.ஏ.,க் கள் மத்தியில் கடும் அதிருப்தியை
ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக, எம்.எல்.ஏ.,க்கள் சிலர் கூறிய தாவது; முதல்வர்
பன்னீர்செல்வம், கட்சியின் பொருளாளர். அவர் முதல்வராக இல்லாத போதே,
ஜெயலலிதா அவரை, தன் அருகில் அமர வைப்பார். சசிகலா, அவரை எம்.எல்.ஏ.,க்
களோடு அமர வைத்துவிட்டார். அவர் வகிக்கும் முதல்வர் பதவிக்கு மரியாதை
அளித்து கூட, தன் அருகே அமர வைக்கவில்லை.

குடியரசு தின விழாவில் முதன் முறையாக, முதல்வர் பன்னீர்செல்வம் தேசியக்
கொடி யேற்றினார். அந்த விழாவில், தன் மனைவி யுடன் பங்கேற்றார். இதனால்,
கடுப்படைந்த சசிகலா, பன்னீர் தனக்கு கீழ்படிந்தவர் என்பதை காட்டவே,
எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில்,அவரை எம்.எல்.ஏ.,க்களோடு அமர வைத்து
விட்டார். என்றும், அவர்கள் கூறினர்.

0 Responses to அ.தி.மு.க – எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் பன்னீர்செல்வத்தை அவமதித்த சசிகலா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com