இன்று வியாழக்கிழமை வெளியான ஒரு ஆய்வின் முடிவுப் படி இன்னும் சில தசாப்தங்களுக்கு ஐரோப்பாவுக்கு முஸ்லிம்கள் குடியேறாவிட்டாலும் அவர்களது சனத்தொகை மிகவும் அதிகரிக்கும் எனக் கணிக்கப் பட்டுள்ளது.
Pew என்ற ஆய்வு மையம் 3 விடயங்களின் கீழ் 2050 இல் ஐரோப்பாவில் முஸ்லிம் சனத்தொகையைக் கணித்தே இம்முடிவை வெளியிட்டுள்ளது. 2016 மத்தி வரை ஐரோப்பாவின் முஸ்லிம் சனத்தொகை 25.8 மில்லியன் ஆகும். இது ஐரோப்பாவின் மொத்த சனத்தொகையில் 4.9% வீதமாக இருக்க 2050 ஆம் ஆண்டுக்குள் எந்தவொரு முஸ்லிமும் குடியேறாவிட்டாலும் முஸ்லிம் சனத்தொகை 30 மில்லியனாகி இந்த வீதம் 7.4% வீதமாகி விடும் என்று கணிக்கப் பட்டுள்ளது. இதற்குக் காரணமாக ஐரோப்பாவிலுள்ள ஏனைய மக்களை விட அங்குள்ள முஸ்லிம்கள் சராசரியாக் 13 வருடம் இளமையானவர்கள் என்பதுடன் அவர்களது பிறப்பு வீதமும் அதிகமாகும்.
இதே கணிப்பு அகதிகளை உள்வாங்காது பொருளாதாரம், கல்வி மற்றும் குடும்ப காரணங்களுக்காக மட்டும் முஸ்லிம்கள் ஐரோப்பாவுக்குள் குடியேறினால் 2050 அளவில் 58.8 மில்லியன் முஸ்லிம்கள் சனத்தொகையுடன் இது மொத்த சனத்தொகையின் 11.2% வீதமும் ஆகும். இதுவே அகதிகளையும் உள்ளடக்கி இந்த இரு வருடங்களைப் போல் தொடர்ந்து முஸ்லிம்கள் குடியேறினால் 2050 இல் 75 மில்லியன் முஸ்லிம்களுடன் மொத்த சனத்தொகையின் 14% வீதத்தை இது பிடித்து விடும் என்றும் கணிக்கப் பட்டுள்ளது.
அதிகளவில் குடியேறி வரும் போதும் ஐரோப்பாவில் முஸ்லிம் சனத்தொகை கிறித்தவர்களை விடவும் சமய நம்பிக்கையற்றவர்களை விடவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. நோர்வே, சுவிட்சர்லாந்து உட்பட ஐரோப்பிய யூனியனில் உள்ள அனைத்து நாடுகளையும் சேர்த்து மொத்தம் 30 ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்த புள்ளிவிபரம் உருவாக்கப் பட்டுள்ளது.

0 Responses to ஐரோப்பாவில் முஸ்லீம்களின் சனத்தொகையில் அதிகரிப்பு ஏற்படும் என்கிறது இக்கணிப்பு!