ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஒற்றுமையை ஏற்படுத்தும் விதத்தில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை நான்கு அமைச்சர்கள் பதவி விலகியதை வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு நாரஹன்பிட்டி அபயாராம விகாரையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதில், கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே டலஸ் அழகப்பெரும மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது, “அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் நால்வர் சகல சலுகைகளையும் கைவிட்டு மீண்டும் எதிர்க்கட்சியுடன் இணைந்துள்ளதை வரவேற்கிறோம். எமது கோரிக்கையை ஏற்று உள்ளூராட்சி சபைகளின் காலத்தை நீடிக்காத நிலையில், அவர்களுக்கு தொடர்ந்து அரசாங்கத்தில் இருப்பது சவாலான விடயமாகும். மனசாட்சிக்கு பயந்து அவர்கள் விலகியுள்ளனர். அரசாங்கத்திலுள்ள ஏனைய அமைச்சர்களும் அந்த வழியை பின்பற்றுவார்கள் என நம்புகிறோம்.” என்றுள்ளார்.

0 Responses to சுதந்திரக் கட்சியின் ஏனைய அமைச்சர்களும் பதவி விலக வேண்டும்: டலஸ் அழகப்பெரும