பிரபல நடிகர் சல்மான்கானுக்கு சாலை வாகன விதிமுறைகளை மீறியது உட்பட எட்டு பிரிவுகளின் கீழ் தனித்தனித் தண்டனை அறிவிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2002ம் ஆண்டு சல்மான்கான் போதையில் காரை ஓட்டிச் சென்று, நடைப்பாதை மேடையில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது காரை ஏற்றியுள்ளார். இதில் ஒருவர் பலியான நிலையில், நால்வர் படுகாயம் அடைந்தனர். இவ்வழக்கில் சல்மான்கான் மீது 8 பிரிவுகளின் கீழ் தண்டனை வழங்கியுள்ளனர் நீதிபதிகள்.முதலில் உயிர் போகும் அளவு விபத்தை ஏற்படுத்தியது, அடுத்து காயம் ஏற்படுத்தியது, படுகாயம் ஏற்படுத்தியது, மது போதையில் வண்டி ஓட்டியது,சாலை வாகன் விதிமுறைகளை மீறியது என்று 8 பிரிவுகளின் கீழ் தண்டனை அறிவிக்கப்பட்டதாகத் தெரிய வருகிறது.
கடைசி தரப்பாக சல்மான் கானுக்கு பேச வாய்ப்பளித்த போதும், தாம் காரை ஓட்டவில்லை என்று மறுப்புத் தெரிவித்தார் என்று கூறப்படுகிறது.இருப்பினும் சல்மான்தான் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தி உள்ளார் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதால் சல்மான்கான்தான் குற்றவாளி என்று கூறிய நீதிபதிகள் சல்மானுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை என்று தீர்ப்பளித்துள்ளனர்.
சல்மானுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின் சிறையில் அடைக்கப்பட்டார் என்றும் ஜாமீனுக்கு சல்மான் தரப்பு மனுத் தாக்கல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 Responses to சல்மான்கான்: சாலை விதிமுறைகளை மீறியது உட்பட எட்டு பிரிவுகளின் கீழ் தண்டனை